விவசாயியை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க ஆர்ப்பாட்டம்

352பார்த்தது
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார்குளம் ஊராட்சியில் மகாத்மா காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு ஊராட்சிக்கு உட்பட்ட கங்கா குளம் கிராமத்தில் உள்ள கோயிலில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் மான்ராஜ் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி, ஊராட்சி தலைவர் பூங்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் வேப்பங்குளத்தை சேர்ந்த அம்மையப்பன் விவசாயி என்பவர் கேள்வி எழுப்பிய பொழுது கிராம ஊராட்சி செயலாளர் தங்கபாண்டியன் என்பவர் அவரை காலால் எட்டி உதைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் அவரைத் தேடி வருகின்றனர்

இந்த நிலையில் விவசாயியை தாக்கிய கிராம ஊராட்சி செயலாளர் தங்கபாண்டியன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவரை நிரந்தரமாக பணிநீக்கம் செய்ய வேண்டும்

கிராம சபை கூட்டத்திற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாதிக்கப்பட விவசாயி அம்மையப்பன் என்பவருக்கு ஆதரவாக அனைத்து கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் ஏராளமனோர் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி