மநீம கட்சியின் 7ம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது

51பார்த்தது
*விருதுநகரில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி. *

தமிழகத்தில் பத்ம ஸ்ரீ கமலஹாசன் அவர்களால் மக்கள் நீதிமய்யம் கட்சி மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் கடந்த 2018ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த கட்சியின் நிறுவனராக கமலஹாசன் அவர்கள் சிறப்பாக செயல் பட்டு வருகிறார்

இந்த கட்சியின் 7 ம் ஆண்டு துவக்க விழா வை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அவர்களது கட்சி நிர்வாகிகள் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் , அன்னதானமும் வழங்கி சிறப்பித்து வருகின்றனர்.


அதனை முன்னிட்டு இன்று விருதுநகரில் மக்கள நீதிமய்யம் கட்சியின் சார்பில் மத்திய மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில் விருதுநகர் தெப்பக் குளம் அருகில் உள்ள சனீஸ்வரன் கோவில் முன்பு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிநடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த நிகழ்வின்போது மக்கள் நீதிமய்யம் கட்சியின் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி