விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே ஆனையூர் அரசு மேல்நிலை பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் இருவேறு மாணவிகளை அதே பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றும் ராஜாமணி, விருதுநகரில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்கு காரில் அழைத்து சென்றுள்ளார். இரு மாணவிகளும் வெவ்வேறு பள்ளிகளில் நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில் இருவரையும் இருவேறு பள்ளிகளுக்கு ஆசிரியர் அழைத்து சென்றுள்ளார். போட்டி முடிந்து முதலாவதாக 12ம் வகுப்பு மாணவியை காரில் அழைத்து வந்தபோது மாணவி போட்டியில் தோல்வியடைந்ததாக ஆசிரியர் ராஜாமணியுடன் கூறியுள்ளார், அப்போது மாணவிக்கு ஆறுதல் கூறுவது போல் நடித்து மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். ஆசிரியரின் செயல்பாடு கண்டு அதிர்ச்சி அடைந்த அது குறித்து யாரிடமும் தெரிவிக்காமல் இருந்துள்ளார்.
இதனிடையே மற்றொரு மாணவியான10ம் வகுப்பு மாணவி கலை திருவிழாவில் வெற்றி பெற்று ஈரோட்டில் நடைபெற இருந்த மாநில அளவிலான கலைத் திருவிழாவிற்கு செல்ல இருப்பதும், அவரை கணித ஆசிரியர் ராஜாமணி காரில் அழைத்து செல்வதையும் அறிந்த பாதிக்கப்பட்ட மாணவி தமக்கு நடந்த பாலியல்தொந்தரவு குறித்து தலைமை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் விருதுநகர் மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கணித ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.