அரசு மதுபான கடையில் பீர் கூலிங்காக இல்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு மேற்பார்வையாளர் மற்றும் கடை விற்பனையாளரை தாக்கிய ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்தவர் சிவக்குமார் இவர் அரசு டாஸ்மார்க் கடையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். அதே கடையில் செல்வராஜ் என்பவர் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த கடைக்கு வந்த சுந்தர்ராஜ் என்பவர் பீர் பாட்டில் வாங்க வந்ததாகவும், அவர் வாங்கிய பீர்பாட்டில் கூலிங்காக இல்லை எனக் கூறியுள்ளார். இதற்கு சிவக்குமார் மற்றும் செல்வராஜ் கூலிங்காக பீர் இல்லை என கூறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுந்தர்ராஜ் அவர்களை தர குறைவாக பேசிவிட்டு அங்கு இருந்து சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து காரில் சுந்தர்ராஜ், சரவணவேல், முத்துக்குமார், மதனகோபால், மற்றொரு முத்துக்குமார் என ஐந்து பேர் வந்து சிவக்குமார் மற்றும் செல்வராஜை தாக்கியுள்ளனர். இது காயமடைந்த சிவகுமார் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் நிலைய போலீஸ் சார் ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.