பொதுமக்களுடன் புத்தாண்டை கொண்டாடிய காவல் கண்காணிப்பாளர்

80பார்த்தது
*பொதுமக்களுடன் புத்தாண்டை கொண்டாடிய விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். *
*காவல்துறையினர் பொதுமக்களின் நண்பன் என்பதை நிரூபிக்கும் வகையில் விருதுநகரில் புத்தாண்டை பொதுமக்களுடன் கொண்டாடிய விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. *

இன்று பிறந்த கி. பி. 2025 ஆம் ஆண்டை உலகம் முழுவதும்
புத்தாடைகள் அணிந்தும் பட்டாசு வெடித்தும் கேக் வெட்டியும் அனைவரும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

ஆனால் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் புத்தாண்டை பேருந்து நிலையத்தில் கேக் வெட்டி பொதுமக்களுடன் கொண்டாடினர். மேலும் அங்கிருந்த பொதுமக்களுக்கும், காவல் துறைக்கும் கேக் மற்றும் இனிப்பு வழங்கினார்.

இந்த நிகழ்வின் போது விருதுநகர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் சூரியமூர்த்தி, அசோகன்
, துணை காவல் கண்காணிப்பாளர் யோகேஷ்குமார், மேற்கு காவல் நிலையஆய்வாளர் நம்பிராஜன் மற்றும் காவல் துறையினர் உடனிருந்தனர்.

காவல்துறையினர் பொதுமக்களின் நண்பன் என்பதை நிரூபிக்கும் வகையில் விருதுநகரில் புத்தாண்டை பொதுமக்களுடன் கொண்டாடியதோடு அவரது கைகளினாலேயே கேக் மற்றும் இனிப்பு வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் செயல் அங்கிருந்த பொது மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி