மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு எண்: 22-ல் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை உறுப்பினர்களுக்கு 50-இலட்சம் ரூபாய் மீன்வளர்ப்பு உள்ளீட்டு மானியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, மேலும் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை உறுப்;பினர்களுக்கு முகமையின் நிதி மூலம் இத்திட்டத்தினை செயல்படுத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தில், இத்திட்டத்தினை செயல்படுத்திட 10-ஹெக்டேர் இலக்காக நிர்ணயம் செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் விருதுநகர் மாவட்ட மீன்வளர்;ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவு செய்து, மீன்வளர்ப்புத் தொழில் செய்து வரும் மீனவ விவசாயிகளுக்கு உள்ளீட்டு மானியமாக 1-ஹெக்டேருக்கு அதிகபட்சமாக 10, 000-எண்ணம் மீன்குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கு ரூ. 5000- மானியமாக வழங்கப்படவுள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் முகமையில் பதிவு செய்து, மீன்வளர்ப்புத் தொழில் செய்து வரும் மீன்வள விவசாயிகள் 114, B 27/1, வேல்சாமி நகர், என்ற முகவரியில் இயங்கிவரும் விருதுநகர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், தொலைபேசி எண். 04562 - 244 707 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.