குத்துச்சண்டை போட்டியில் 3 இடத்தை பிடித்த பள்ளி மாணவர்கள்

1876பார்த்தது
*கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் 18 பதக்கங்களை வென்று 3 இடத்தை பிடித்து விருதுநகர் பள்ளி மாணவர்கள் சாதனை. * கரூர் மாவட்டத்தில் ஸ்ரீ சாய் பாக்ஸிங் கிளப் மற்றும் கரூர் டிஸ்டிரிக்ட் பாக்ஸிங் அசோசியேசன் சார்பாக மாநில அளவிலான மாதம் நாட்கள் குத்துச்சண்டை போட்டிகள் கடந்த டிசம்பர் மாதம் 23 மற்றும் 24 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றன. இந்த போட்டியில் கேரளா, பாண்டிச்சேரி, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து 6 வயது முதல் 60 வயது வரை 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த குத்துச்சண்டை போட்டி எடை பிரிவு வாரியாக பல பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் 40 லிருந்து 45 வரை உள்ள எடைப்பிரிவில் தமிழ்நாட்டு பிரிவில் விருதுநகர் மாவட்டத்திலிருந்து மை டீரிம் பாக்ஸிங் கிளப் சார்பில் மாஸ்டர் ரபீக் உசேன் ராஜா தலைமையில் சுமார் 20 க்கும் மேற்பட்ட பள்ளியில் பயிலுகின்ற மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு 10 தங்கம் 5 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 18 பதக்கங்களை வென்று விருதுநகர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி