விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் குமரி முனையில் வானுயர்ந்து நிற்கும் அய்யன் திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், விருதுநகர் மாவட்ட நிர்வாக ஒருங்கிணைப்பில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினாப் போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன், இ. ஆ. ப. , அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர்(தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம்) முனைவர் சங்கர சரவணன் அவர்கள் அறிமுகவுரையாற்றினார்.
தொடர்ந்து, நிறுவுநர்- ஒருங்கிணைப்பாளர் வள்ளுவர் குரல் குடும்பம் திரு. சி. இராஜேந்திரன், இ. வ. ப. , (பணி நிறைவு) அவர்கள் சிறப்புரையாற்றினார்.
இந்த மாநில அளவிலான வினாடி வினா போட்டியில் மாவட்ட அளவில் நடைபெற்ற முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்ற 38 மாவட்டங்களைச் சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் 150 குழுக்களாக பங்கு பெற்றனர்.
வெற்றி பெறும் குழுக்களுக்கு முதல் பரிசு ரூ. 2 இலட்சம், இரண்டாம் பரிசு ரூ. 1. 50 இலட்சம், மூன்றாவது பரிசு ரூ. 1 இலட்சம் மற்றும் ஆறுதல் பரிசாக மூன்று குழுக்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் என மொத்தம் 6 குழுக்களுக்கு ரூ. 5. 25 இலட்சம் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.