விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (06. 10. 2023) அன்று மாவட்டத்தின் வளர்ச்சி பணிகளுக்காக இராஜபாளையம் சுப்புராஜ் காட்டன் மில் சார்பில் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் ரூ. 21. 81 இலட்சம் மதிப்பிலான காசோலை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் வழங்கப்பட்டது.
முன்னேற விளையும் மாவட்டமான விருதுநகர் மாவட்டத்திற்கு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கும் சமூகத்தின் மீதான தொழிற் நிறுவனங்களின் பொறுப்பு நிதியினை கொண்டு பள்ளிகள், உட்கட்டமைப்பு மேம்படுத்துதல், பள்ளி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்குதல், கற்றல் மற்றும் கற்பித்தலில் திறனை மேம்படுத்துதல், பள்ளி சுவர்களில் சிந்தனையினை தூண்டும் வகையில் சித்திர விளக்கப் படங்கள் வரைதல் அங்கன்வாடி மையங்கள் மேம்படுத்துதல், நீர்நிலைகளை புனரமைத்தல், அரசு மருத்துவ மனைகளுக்கு உபகரணங்கள் வழங்குதல் மற்றும் வாழ்வாதார மேம்பாடு செய்தல் போன்ற வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலம் சமூக பொறுப்பு நிதி சமுதாய வளர்ச்சிக்கு நிதி ஆதாரங்களை வழங்கி வருகிறது. மாவட்டத்தின் வளர்ச்சி பணிகளுக்காக இராஜபாளையம் சுப்புராஜ் காட்டன் மில் சார்பில் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் ரூ. 21. 81 இலட்சம் மதிப்பிலான காசோலை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன் வழங்கப்பட்டது.