சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் சாலை மறியல்

74பார்த்தது
*விருதுநகரில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் - 100க்கும் மேற்பட்டோர் கைது

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பாக மாவட்ட நிதி காப்பாளர் விக்னேஷ் தலைமையில்

திமுகவின் சட்டமன்றத் தேர்தல்வாக்குறுதிக்கு மாறாக ஓய்வூதிய திட்டம் தொடர்பாக ஆய்வு செய்ய அமைத்த அலுவலர் குழுவை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்,

ராஜஸ்தான், ஜார்கண்ட், சட்டீஸ்கர் , இமாச்சலப் பிரதேசம், ஆகிய மாநிலங்களில் உள்ளது போல் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியது போன்று தமிழகத்தில் ஆளுகின்ற திமுகவும் சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி எண் 30
என் படி பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்

பிற மாநிலங்களில் சிபிஎஸ் திட்ட ஊழியர்களுக்கு வழங்குவது போல் பணிக்கொடை மற்றும் குடும்ப ஓய்வூதியத்தை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி இன்று நூற்றுக்கும் மேற்பட்டோர் தமிழக அரசுக்கு எதிராக கண்டனம் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பின்பு சாலை மறியலில் ஈடுபடமுயன்றனர்.

சாலை மறியலில் ஈடுபட முயன்ற 100க்கும் மேற்பட்டவர்களை சூலக்கரை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்

இந்த சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி