விருதுநகர் மாவட்டம், மேலச்சின்னையாபுரம் ஊராட்சிக்குட்பட்ட மேலச்சின்னையாபுரம் என்ற பெயர் பலகை பல மாதங்களாக இல்லாததால் பஸ் நிறுத்ததிற்கு தள்ளி போய் நிற்க வேண்டிய சூழல் உள்ளது, இதனால் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் உடன் பயணிகள் தகராறு செய்ய வேண்டிய நிலை உண்டாகிறது. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஊர் பெயர் பலகை வைக்க வேண்டி அவ்வூர் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.