100 நாள் வேலை திட்ட பணித்தள பொறுப்பாளரை நியமிக்க கோரிக்கை

50பார்த்தது
*விருதுநகரில் சத்திரரெட்டியபட்டி ஊராட்சி கிராம மக்களால் தேர்வு செய்யப்பட்ட 100 நாள் வேலை திட்ட பணித்தள பொறுப்பாளரை நியமிக்க கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்*

100 நாள் வேலை திட்டத்திற்கான சத்திரரெட்டியபட்டி ஊராட்சி கிராம மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பணித்தள பொறுப்பாளரை உடனடியாக நியமிக்க கோரி விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை 100க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்*.


விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சத்திரரெட்டியபட்டி ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தின் பணித்தள பொறுப்பாளராக ஞான பவானி என்பவரை கிராம மக்கள் ஒரு மனதாக தேர்வு செய்தனர்.

கிராம மக்கள் தேர்வு செய்த பணித்தள பொறுப்பாளரை நியமிக்க விருதுநகர் வட்டார வளர்ச்சி அலுவலர் காலம் தாழ்த்தி வருவதாக கூறி இன்று விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை இந்த கிராமத்தைச் சேர்ந்த 100-க்கு மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் அதிகாரிகள் மற்றும் போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சமரச பேச்சுவார்த்தைக்குப் பின் பொது மக்களால் தேர்வு செய்யப்பட்ட பணித்தள பொறுப்பாளருக்கு பணி வழங்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் பெண்கள் கலைந்து சென்றனர்.

பேட்டி: ஜெயபாண்டி - பகுதிவாசி

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி