விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே ராஜகுலராமன் பகுதிக்குள் ஜே. ஜே. காலணி உள்ளது. இந்த காலணியில் சுமார் 100க்கும மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் நகராட்சியில் தூய்மைப் பணியாளர்களாக
வேலை செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு தமிழக அரசு சார்பில் கடந்த 30 வருடங்களுக்கு முன்பு இலவசமாக காலணி வீட்டை கட்டிக் கொடுத்தார்கள் என்றும்,
தற்பொழுது அந்த குடியிருப்புகள் அனைத்தும் மிகவும் சேதமடைந்து காணப்படுவதாகவும், மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் கவனத்தில் எடுத்துக்கொண்டு, சேத மடைந்த வீடுகளில் மராமத்து பணிகளை உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் எனவும்,
மேலும் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சொந்த வீடு இல்லாமல் கூட்டு குடும்பமாக வாழ்ந்துவருவதாகவும் உடனடியாக இலவச வீட்டுமனை பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், தாங்கள் குடியிருக்கும் பகுதிகளில் கழிப்பறை வசதி மற்றும் சமுதாயக் கூடம் கட்டித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 30 க்கும் மேற்பட்டோர் இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்