பணிச்சுமை காரணமாக பம்ப் ஆப்பரேட்டர் தூக்கிட்டு தற்கொலை

85பார்த்தது
விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆவுடையாபுரம் பகுதியில் வசித்து வருபவர் கருணாகரன் வயது ( 45 ) இவருக்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் குழந்தைகள் பள்ளியில் படித்து வருகின்றனர்.

கருணாகரன் பம்ப் ஆப்பரேட்டராக பணிபுரியும் அதே ஊராட்சியில் செயலாளராக கடம்பங்குளம் பகுதியைச் சார்ந்த கணேச பாண்டி (47) என்பவர்பணிபுரிகிறார். இந்த நிலையில் தொடர்ந்து பம்ப் ஆப்ரேட்டரான கருணாகரனுக்கு வழக்கத்திற்கு மாறாத அதிக பணிச்சுமை வழங்கி வந்ததாகவும் அவருடைய தொந்தரவு தாங்க முடியாமல் கருணாகரன் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற வச்சக் காரப்பட்டி காவல் நிலைய காவல் துறையினர் இறந்த கருணாகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கருணாகரன் எழுதிய கடிதத்தை கைப்பற்றியுள்ள காவல் துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் உயர் அதிகாரியின் துன்புறுத்தல் தாங்க முடியாமல் பம்ப் ஆப்ரேட்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் விருதுநகர் அருகே ஆவுடையாபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி