விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசையும் டாஸ்மார்க் நிர்வாகத்தையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு விருதுநகர் மாவட்ட செயலாளர் கனி தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட டாஸ்மார்க் பணியாளர்கள், டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், பணி பாதுகாப்பு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.