விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் சங்க அலுவலகத்தில் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் சார்பாக விருதுநகர் மாவட்ட பால்வளத்துறை துணைப் பதிவாளர் சம்பத் அவர்களை நேரில் சந்திப்பதற்காக மாவட்ட செயலாளர் பாலமுருகன் தலைமையில் சங்கத்தின் நிர்வாகிகள் சென்றனர்
அப்போது பால்வளத்துறை துணைப்பதிவாளர் சம்பத் அவர்கள் சங்கத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் இடமும் செல்போன்களை அனைத்தையும் கேரிப்பையில் போடுமாறு கட்டாயப்படுத்தியதாகவும்,
மேலும் பால் உற்பத்தியாளர்களுக்கு தமிழக அரசு அறிவித்த லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் ஊக்கத்தொகை இரண்டு மாதங்களாக வழங்கவில்லை எனவும், பால் பணம் பட்டுவாடாவை 10 தினங்களுக்கு ஒரு முறை வழங்கக்கூடியதை 40 நாட்கள் ஆகியும் இதுவரை வழங்கவில்லை எனவும்,
இது சம்பந்தமாக தங்களிடம் பேச வருகின்ற பொழுது தலைவர்களை ஒருமையில் பேசுவது , செல்போனை புடுங்கி வைத்துக் கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுவது சரி இல்லை என்பதை வலியுறுத்தியும்,
தமிழக அரசு பால்வளத்துறை துணைப்பதிவாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
பின்பு காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்ததை அடுத்து உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்