விருதுநகர்: திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்

55பார்த்தது
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்ககம் சார்பில், வைகை இளைஞர் இலக்கியத் திருவிழா -2024 மற்றும் அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதன் வெள்ளி விழாவினை முன்னிட்டு, நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வீ. ப. ஜெயசீலன்,  பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி,  வைகை இளைஞர் இலக்கியத் திருவிழா-2024 விருதுநகர் மாவட்டத்தில் கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவத்தின் தமிழ் மன்றம் மற்றும் சாத்தூர் மேட்டமலை ஸ்ரீகிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளைஞர் இலக்கிய திருவிழாக்கள் நடத்தப்பட்டது.

மேலும், கன்னியாகுமரி திருவள்ளுவரின் 133 அடி உயர சிலை அமைக்கப்பட்டதன் 25-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அனைத்து மாவட்ட மைய நூலகங்களிலும் டிசம்பர் 23 முதல் டிசம்பர் 31 முடிய திருவள்ளுவர் புகைப்படம் காட்சிப்படுத்தி, திருக்குறளின் பெருமையை உணர்த்தும் நிகழ்ச்சிகள் நடத்துதல், திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தல், திருக்குறள் விளக்க உரைகள், திருக்குறள் தொடர்பான புகைப்படக் கண்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

தொடர்புடைய செய்தி