அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மனு

565பார்த்தது
*விருதுநகரில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் செல்வம் தலைமையில், சிமிண்ட் சாலைகள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தர கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு. *

விருதுநகர் மாவட்டம் மாந்தோப்பு கிராமத்தில் கிழக்கு தெரு காலணி உள்ளது. இந்த காலணியில் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த காலணி குடியிருப்பு பகுதியில் பஞ்சாயத்து நிர்வாகத்தால் எந்த அடிப்படை வசதியும் செய்து தரவில்லை எனவும். மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி கொசுக்கள் மூலம் பல்வேறு நோய்களால் இந்த பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு மிகுந்த சிரமத்திற்குள் ஆளாகினர் என்றும்

ஆகையில் தங்கள் காலணி குடியிருப்பு பகுதியில் மாவட்ட நிர்வாகம் நேரடியாக ஆய்வு செய்து சாலை வசதி, உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பாக நகர தலைவர் செல்வம், தலைமையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்

மேலும். இந்த நிகழ்வின் போது தொழிற்சங்க பிரிவு அணியைச் சேர்ந்த சக்திவேல் உடனிருந்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி