*100 நாள் வேலைக்கு ஆறு மாதங்களுக்கு மேலாக ஊதியம் வழங்கவில்லை என பெண்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு*
விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சத்திர ரெட்டியாபட்டி பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் 100 நாள் வேலை செய்து வருகின்றனர் இந்த 100 நாள் வேலை இந்த பகுதி பெண்களுக்கு பிரதான தொழிலாக உள்ளது இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக 100 நாள் வேலைக்கு ஊதியம் வழங்கவில்லை என கூறப்படுகிறது எனவே தங்களுக்கு உரிய ஊதியம் வழங்க வேண்டும் என 100 நாள் வேலை செய்யும் பெண்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்