சிற்றுந்து புதிய வழித்தடத்திற்கு அனுமதி

84பார்த்தது
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் சிற்றுந்து புதிய வழித்தடத்திற்கு அனுமதி வழங்குவது குறித்த செயல்முறை ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் வாகன உரிமையாளர்களுக்கு வழங்கினார்.

விருதுநகர் மாவட்டத்தில், மினி பேருந்துக்கான புதிய விரிவான திட்டம் 2024, மோட்டார் வாகன சட்டம் 1988 ன் கீழ் G. O. NO. MS. NO. 33, நாள் 23. 01. 2025-ன் படி அரசாணை பிறப்பிக்கப்பட்டு பொதுமக்களின் நலன் கருதி அதிக குடும்பங்களைக் கொண்ட கிராமங்கள்ஃகுக்கிராமங்கள் ஃ குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு போதுமான பொருளாதார மற்றும் ஒழுங்கான ஒருங்கிணைந்த சாலை போக்குவரத்து சேவையை அரசு வழங்குவதற்காகவும் 100 அல்லது அதற்கு மேற்பட்ட குடும்பங்களின் மக்கள் தொகை மற்றும் போதுமான பேருந்து சேவைகள் வழங்கப்பட்டுள்ள அருகில் உள்ள பேருந்து நிலையம் அல்லது அருகிலுள்ள நகரத்தை அடைய எந்த வழியும் இணைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் நோக்கிலும் தமிழக அரசால் மேற்படி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புதிய விரிவான திட்டம் 2024 வெளியீடு உடனடியாக அமலுக்கு கொண்டு வரும் நோக்கில் விருதுநகர் வட்டாரப்போக்குவரத்து அதிகாரி / மாவட்ட ஆட்சியர் அவர்களால் இதுவரை மூன்று அரசிதழ்கள் வெளியிடப்பட்டன. 56 புதிய வழித்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அரசிதழில் விளம்பரப்படுத்தப்பட்டு 28. 02. 2025 க்குள் விண்ணப்பம் பெற கடைசி நாளாக அறிவிப்பு செய்யப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி