மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது

52பார்த்தது
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு,  விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.  

மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடி மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

இக்கூட்டத்தில் தையல் இயந்திரம் வேண்டி விண்ணப்பம் செய்த 3 மனுதாரருக்கு உடனடியாக மனுவை பரிசீலனை செய்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம் சார்பில் தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி