மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது

79பார்த்தது
விருதுநகர் மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள்; கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன், இ. ஆ. ப. , அவர்கள் தலைமையில் இன்று (11. 11. 2024) நடைபெற்றது.

இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.

மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடி மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

அதனை தொடர்ந்து, மாற்றுத்திறானளிகள் நலத்துறையின் மூலமாக ரூ. 9, 800/- மதிப்பிலான மூன்சக்கர மிதிவண்டியினை பயளானிக்கு வழங்கினார்.

இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்புடைய அலுவலர்களை அறிவுறுத்தினார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி