இந்தியாவின் முதல் விடுதலைப் பெண் போராளி வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் 294 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் அவரது திரு உருவ படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அதனை முன்னிட்டு இன்று விருதுநகர் தேசபந்து மைதானத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கிழக்கு மாவட்ட தலைவர் செல்வம் தலைமையில் வீரமங்கை ராணி வேலுநாச்சியார் அவர்களின் 294 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் இந்த நிகழ்வில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த தொண்டர்கள் கலந்து கொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்