ஊராட்சி செயலர்கள் ஆர்ப்பாட்டம்.

61பார்த்தது
ஊராட்சி செயலர்கள் ஆர்ப்பாட்டம்.

தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட
பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஊராட்சி செயலர்கள் விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும், ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் பதிவறை எழுத்தர்களுக்கு உண்டான அரசின் சலுகைகளை விரிவுபடுத்தி அரசாணை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வலியுறுத்தி தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பில் விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இச்சங்க விருதுநகர்
மாவட்டத் தலைவர் கணேச பாண்டியன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் ராமசுப்பு முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் கண்ணன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் மாவட்டம் முழுவதிலிருந்து ஊராட்சி செயலாளர்கள் 275 பேர் 1 நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதில், மாவட்ட தலைமை நிலைய செயலாளர் தங்கவேல், மாவட்ட அமைப்புச் செயலாளர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர்களின் தற்செயல் விடுப்பால் ஊராட்சி பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி