விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அருகே விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் கடந்த 18 ஆம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து வெளியான செய்தியின் அடிப்படையில், தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் நீதிபதி ராஜ இளங்கோ இன்று விசாரணை நடத்தினர்.
விசாரனை அடுத்து இந்த வெடி விபத்து குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் மற்றும் காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லாவிற்கு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் நீதிபதி ராஜ இளங்கோ உத்தரவிட்டு உள்ளார்.