விருதுநகர்: இருசக்கர வாகனத்தின் குறுக்கே நாய்வந்ததால் விபத்து; ஒருவர் பலி

75பார்த்தது
இருசக்கர வாகனத்தின் குறுக்கே நாய் வந்ததால் விபத்து ஒருவர் பலி மதுரை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் விருதுநகர் வடமலை குறிச்சி சந்திப்பில் ராகுல் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் கார்த்திக் ராஜா என்ற நண்பருடன் சென்று கொண்டிருந்த பொழுது வடமலை குறிச்சி விளக்கு அருகில் இவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் குறுக்கே நாய் வந்ததால் ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே கார்த்திக் ராஜா உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த ராகுல் காயம் அடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி