*விருதுநகரில் சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம். - 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு. *
தமிழகம் முழுவதும் சத்துணவு மைய காலிப்பணியிடங்களை தொகுப்பூதியத்தில், நியமனம் செய்யும் அரசாணையை ரத்து செய்து, சிறப்பு காலமுறை ஊதியத்தில் நியமனம் செய்ய வேண்டும், வருவாய் கிராம உதவியாளர்களுக்கு வழங்குவதைப் போல அகவிலைப்படியுடன் கூடிய மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 6750/- வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்,
தமிழக முதலமைச்சரின் காலை சிற்றுண்டி, உணவு வழங்கும் திட்டத்தினை சத்துணவு ஊழியர்கள் மூலமாக அமுல்படுத்த வேண்டும்,
அரசு அனைத்துத்துறை காலிப் பணியிடங்களில் பணிமூப்பு அடிப்படையில் முன்னுரிமை அளித்து காலமுறை ஊதியத்தில் பதவி உயர்வு வழங்க வேண்டும்,
அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் பெண் சத்தணவு ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு 12 மாதம் வழங்க வேண்டும் என்பன
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில்
மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
விருதுநகரில்
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இச்சங்க விருதுநகர் மாவட்டத் தலைவர்
எஸ்தர் தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.