புதிய பேருந்து நிலையம் நூறாவது நாள் செயல்பாடு கொண்டாட்டம்

76பார்த்தது
விருதுநகர் நகராட்சி பெருந்தலைவர் காமராசர் புதிய பேருந்து நிலையம் கடந்த 1992-ம் ஆண்டு தொடங்கப்பட்டு இரண்டு மூன்று மாதங்கள் மட்டுமே செயல்பட்டது.

அதன் பின்னர் கிட்டத்தட்ட 32 ஆண்டுகளில் புதிய பேருந்து நிலையம் 12 முறை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படுவது மீண்டும் முடங்கும் நிலையிலேயே இருந்து வந்தது.

இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகள், விருதுநகர் வளர்ச்சி கூட்டமைப்பினர் ஆகியோரின் கோரிக்கையை ஏற்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் செயல்பட உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து நவம்பர் 29ஆம் தேதி ‌இன்று புதிய பேருந்து நிலையம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்து இன்றுடன் 100-வது நாளை கொண்டாடும் விதமாக விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தில் மக்கள் வளர்ச்சி கூட்டமைப்பினர் சார்பாக பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் ஆகியோருக்கு நினைவு பரிசு மற்றும் இனிப்புகள் வழங்கியும் இலவசமாக வெஜிடபிள் பிரியாணி வாங்கி உற்சாகமாக கொண்டாடினர்.

பொதுமக்களும் பேருந்து பயணிகளும் ஆர்வமாக வெஜிடபிள் பிரியாணியை வாங்கிச் சென்றனர்.

மேலும் விருதுநகர் நகராட்சி காமராசர் புதிய பேருந்து நிலையம் நிரந்தரமாக செயல்பட வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி