விருதுநகர் அருகே
காரிசேரி மாரியம்மன் கோவிலில் கடந்த 45 நாட்களுக்கு முன்னர் கும்பாபிஷேக விழா நடைபெற்றுள்ளது. இதையடுத்து இன்று 45வது நாள் மண்டல பூஜைக்காக கிராமத்தில் மைக் செட் மற்றும் சீரியல் லைட் அமைக்கும் பணி நடைபெற்றுள்ளது. மைக் செட் அமைக்கும் பணியில் அதே ஊரை சேர்ந்த திருப்பதி ஈடுபட்டிருந்தார். சீரியல் லைட் அமைத்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக உயர் அழுத்த மின் கம்பி மீது சீரியல் லைட் வயர் உரசி அதிலிருந்து ஏற்பட்ட மின் கசிவினால் மைக்செட் உரிமையாளர்
திருப்பதி(28) மீது மின்சாரம் பாய்ந்தது.. அப்போது 5 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் திருப்பதி, அவரது மனைவி லலிதா, மற்றும் பாக்கியம் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும்
மேலும் திருப்பதியை காப்பாற்ற முயன்ற அவரது உடன் பிறந்த சகோதரர் தர்மர் 20, மற்றும் உறவினர் கவின்குமார் 17 ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ ஆர் ஆர் சீனிவாசன் அவர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நபர்களின் குடும்பத்தினரை விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்