அம்பேத்கரின் படத்திற்கு மரியாதை செலுத்தாத அமைச்சர்கள்

72பார்த்தது
விருதுநகரில் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி கலையரங்கில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சமத்துவ நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மற்றும் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் மற்றும் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் 1155 பயனாளிகளுக்கு சமூக நலத்துறை யின் மூலம் முதலமைச்சரின் 2 பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் 204 பயனாளிகளுக்கு ரூ. 51 லட்சம் உள்பட ரூ. 5. 07 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினார்கள்.

இந்த நிலையில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற சமத்துவ விழா நடைபெற்ற மேடையில் அம்பேத்கர் அவர்களின் புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது.

மேலும் வருவாய்த்துறை மற்றும் நிதித்துறை அமைச்சர்கள் என இரண்டு அமைச்சர்கள் கலந்து கொண்ட அரசு விழாவில் மேடையில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் திரு உருவப்படத்திற்கு இரண்டு அமைச்சர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தாமல் சென்ற சம்பவம் விழா நடைபெற்ற இடத்தில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி