விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், விருதுநகர் மண்டலத்தில் புதியதாக பெறப்பட்ட 13 புதிய பேருந்துகளின் சேவையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் அவர்கள், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர். ஏ. ஆர். ஆர். ரகுராமன் அவர்கள் மற்றும் சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் மற்றும் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்கள்.