விருதுநகர் மாவட்டம், வே. வ. வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரியில் இன்று (09. 07. 2024) கல்லூரிக் கல்வித் துறை சார்பில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் முதலாம் ஆண்டு பயிலும் கல்லூரி மாணவர்களுக்கான வழிகாட்டும் பயிற்சி (Induction Programme) வகுப்புகள் மாவட்டஆட்சித்தலைவர்
முனைவர் வீ. ப. ஜெயசீலன், இ. ஆ. ப. , அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்டஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
பள்ளிக் கல்வியைச் சிறப்பாக முடித்துவிட்டுக் கல்லூரிகளுக்குள் கனவுகளுடன் வந்திருக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வியின் அனைத்துக் கிளைகளிலும் ஊக்குவித்து ஒளிமயமான எதிர்காலம் நோக்கி ஆற்றுப்படுத்துவது, எதிர்காலத்திற்குப் பயன்படும் வளமான நம்பிக்கைகளை அளிப்பது இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.