*விருதுநகரில் மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டம்-50 க்கும் மேற்பட்டோர் பங்கேற்ப்பு. *
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மக்களைத் தேடி மருத்துவ சங்கம் சார்பாக விருதுநகர் மாவட்ட சங்க தலைவி இராஜேஸ்வரி தலைமையில்,
WHV தன்னார்வலர்களை ஊழியராக அங்கீகரித்து பணி நிரந்தரம் செய்திட வேண்டும், தமிழக அரசு மாத ஊதியம் ரூ 26000 நிர்ணயம் செய்து, தற்போது வழங்க கூடிய ஊக்கத்தொகையை நேரடியாக ஊழியர்களின் வங்கி கணக்கில் அரசே செலுத்திட வேண்டும், ,
கருவுறும் ஊழியர்களுக்கு மகப்பேறு சலுகையை வழங்கிட வேண்டும், ஊழியர் திறன் வளர்க்கும் பயிற்சி அளித்து அதற்கான சான்றிதழ்களை வழங்கிட வேண்டும்,
மானிய விலையில் இருக்கர வாகனம் வழங்க வேண்டும், பணக் காலத்தில் இறக்கும் ஊழியர் குடும்பத்திற்கு ரூ 5 லட்சம் நிவாரணத் தொகை தமிழக அரசு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்