கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது

52பார்த்தது
விருதுநகர் மாவட்டத்தில், தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ், கால்நடைகளுக்கான கால் மற்றும் வாய் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் வருகிற 2024 ஜுன் 10-ஆம் தேதி முதல்; ஜீலை 10-ஆம்  தேதி வரை நடைபெற உள்ளதால் கால்நடை வளர்ப்போர் இதனை பயன்படுத்திக கொள்ளவேண்டும். இந்நோய் கண்ட கால்நடைகளுக்கு உடனடி இறப்பு ஏற்படாவிட்டாலும் உற்பத்தி திறன் அதிக பாதிப்பு ஏற்படும்.  கால் மற்றும் வாய் காணை (கோமாரி) நோயானது குறிப்பாக கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது.

தொடர்புடைய செய்தி