மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குருவிளாம்பட்டியைச் சேர்ந்தவர் தமிழரசன். இவரின் அண்ணன் பாலகிருஷ்ணன் (வயது 26), குற்ற வழக்கில் கைதாகி விருதுநகர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், தனது அண்ணனை நேரில் பார்ப்பதற்காகத் தமிழரசன் விருதுநகர் மாவட்ட சிறைக்கு வந்தார். அப்போது, நுழைவு வாயில் அருகே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறைக் காவலர்கள், தமிழரசனைச் சோதனை செய்தனர். அப்போது அவரின் சட்டைப் பையில் 2 சிறிய பிளாஸ்டிக் கவரில் 12 கிராம் எடை அளவு கஞ்சா பதுக்கி வைத்து சிறைக்குள் எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவரிடம் சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துகையில், அண்ணன் பாலகிருஷ்ணனுக்குக் கொடுப்பதற்காகத் தமிழரசன் சிறைக்குள் கஞ்சா எடுத்து வந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரைக் கைதுசெய்த விருதுநகர் மேற்கு காவல்நிலைய போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.