கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

73பார்த்தது
கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து விருதுநகர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது


விருதுநகர் மாவட்டம் வச்சகாரப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சென்னல் குடியைச் சார்ந்த கருப்பசாமி என்பவர் கேரளா மாநிலத்தைச் சார்ந்த விஷ்ணு என்பவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததாகவும் அப்பொழுது வேலையின் பொழுது ஏற்பட்ட தகராறில் கருப்பசாமி விஷ்ணுவை சுத்தியலால் தாக்கியுள்ளார் இதில் விஷ்ணு உயிரிழந்ததாக கூறப்படுகிறது இது குறித்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் விருதுநகர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது இதில் கருப்பசாமி என்பவரை குற்றவாளியாக அறிவித்து அவருக்கு தண்டனை மற்றும் 6500 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது மேலும் இது போன்ற குற்றங்களை ஈடுபடுவோர் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி