2025-ஆம் ஆண்டிற்கான சுதந்திர தின விழாவின் போது, முதல்வர், ஏதேனும் ஒரு துறையில் துணிவு மற்றும் வீரதீர சாகச செயல் புரிந்த மகளிருக்கான 'கல்பனா சாவ்லா விருது 2025' வழங்கப்பட உள்ளது. விருதுகளுடன் ரூ. 5,00,000/- ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்படுகிறது. தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாட்டை பிறப்பிடமாகக் கொண்டவராகவும் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். ஏதேனும் ஒரு துறையில் துணிவு மற்றும் வீரதீர செயல் புரிந்திருக்க வேண்டும்.
இவ்விருதிற்கான விண்ணப்பங்கள், விரிவான தன்விவரக் குறிப்பு மற்றும் ஆவணங்களுடன் (https://awards.tn.gov.in) என்ற இணையதள முகவரியில் 16.06.2025-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேற்கண்ட விண்ணப்ப விவரங்களை மாவட்ட சமூகநல அலுவலகத்தில் 20.06.2025-க்குள் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும், தொடர்புக்கு மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விருதுநகர் மாவட்டம். 04562-252701 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சிதலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.