திமுக அரசின் தேர்தல் கால வாக்குறுதியான புதிய பென்சன் திட்டம் ரத்து செய்து சத்துணவு ஊழியர்கள், எம். ஆர். பி. செவிலியர், உள்ளிட்டோருக்கு சிறப்பு காலமுறை ஊதியம், நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்களுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி 41 மாத கால பணிநீக்க காலத்தை வரன்முறை படுத்த வேண்டும், தமிழக அரசு துறையில் காலியாக உள்ள 5 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு வழங்க வேண்டும் மற்றும் அரசு ஊழியர்கள் மாநில மாநாட்டில் முதலமைச்சர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், பழைய பென்சன் திட்டத்திற்காக அமைக்கப்பட்ட ஆய்வுக்குழுவை கண்டித்தும் தமிழக முழுவதும் ஜாக்டோ ஜியோவினர் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு விடுத்த நிலையில் இந்த அறிவிப்பின்படி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதற்காக இன்று காலை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அங்கு கூடியிருந்த நிலையில் அவர்கள் அங்கு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதற்காக பந்தல் அமைக்கவும் இருக்கைகள் அமைக்கவும் காவல்துறையினர் அனுமதி தரவில்லை இதனால் இருதரப்பிற்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து காவல்துறையினர் அனுமதி வழங்கிய நிலையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்