நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பேட்டி

77பார்த்தது
விருதுநகரில் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பேட்டி

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த ஞானசேகரன் வழக்கு விரைவாக முடிக்கப்பட்டு இருப்பதற்கு நீதித்துறைக்கும் விரைவாக நடத்திய சட்டத்துறைக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாகவும், இது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு இதே போன்று கடுமையான தண்டனைகளை விதித்து பெண்களுடைய பாதுகாப்பிற்கு சட்டத்துறை எடுத்துக்காட்டாக விளங்குவாதக தெரிவித்தார்.
அதை தொடர்ந்து பேசிய அவர் டெல்லியில் யமுனை ஆற்றங்கரை பகுதியில் தமிழகத்தைச் சார்ந்தவர்கள் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருவதாகவும் அந்த பகுதியில் உள்ள வீடுகளை பாஜக அரசு அமைந்த உடன் அவசர அவசரமாக இடித்து வருவதாகவும் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்த காலத்தில் கூட அந்த பகுதியில் உள்ள வீடுகள் இடிக்கப்படாமல் இருந்ததாகவும் இது வருந்தக்கூடிய ஒன்று எனவும் இதற்காக பாஜக அரசு உச்ச நீதிமன்றம் வரை சென்று இருக்க வேண்டும் எனவும் மேலும் டெல்லி பாஜக அரசு தமிழக மக்கள் மீது எந்தவித அக்கறையையும் கொள்ளவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக இருப்பதாகவும் பாஜக எப்பொழுதும் தமிழக மக்களின் விரோத அரசுக்கு எடுத்துக்காட்டாக இருப்பதாக கூறினார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி