தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி பேட்டி

981பார்த்தது
தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசும்பொழுது,

இந்திய அரசு எம். எஸ். சாமிநாதன் ஆணையத்தின்படி உழவர்களின் அனைத்து உற்பத்தி பொருட்களுக்கும் உற்பத்தி செலவுடன் 50% கூடுதலாக சேர்த்து குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். தமிழக அரசு விவசாயிகள் உற்பத்தி செய்யகூடிய நெல் குவிண்டாலுக்கு ரூ 3000, கரும்பு டன்னுக்கு ரூ 5000, மக்காசோளம் குவிண்டாலுக்கு ரூ 3000ம் மாட்டு பால் லிட்டருக்கு ரூ 50ம் எருமைப்பால் லிட்டருக்கு ரூ 75ம் வழங்க வேண்டும், தமிழக அரசு தென்னை-பனைமரங்களிலிருந்துகள் இறக்கி விற்க அனுமதி வழங்க வேண்டும்,

கொப்பரை தேங்காய்க்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ 150 நிர்ணயம் செய்ய வேண்டும். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டதை அனைத்து வேளாண் பணிகளுக்கு மட்டுமே வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் 63 பேர் உயிர் தியாகம் செய்து போராடி பெற்ற வேளாண் உரிமை மின்சாரத்தை ரத்து செய்வதற்கு வழிவகை செய்யும் மின்சார சட்டதிருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வருகின்ற ஜூலை 5ம் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி