விருதுநகர் மேற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மாம்பழ பேட்டை பகுதியில் குமரன் என்ற குமரவேல் என்பவரை கொலை செய்த வழக்கில் தற்போது ஏழு நபர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டதாகவும் அதன் காரணமாக அவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் அவர்கள் 7 நபர்களும் குன்டாஸ் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.