தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இப்தார் நோன்பு

76பார்த்தது
*விருதுநகரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இல்லாமிய சகோதரர்களுடன் இணைந்து இப்தார் நோன்பில் கலந்து கொண்ட நிர்வாகிகள். *

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நிறுவனத் தலைவர் விஜய் அவர்களின் உத்திரவின் பேரில் தமிழ்நாடு முழுவதும் உள்ள இல்லாமிய சகோதரர்களுடன் இணைந்து இப்தார் நோன்பு எடுக்க வேண்டும் என்று உத்திரவிட்டுள்ளார். அவர் உத்திரவின் பேரில் தமிழகம் முழுவதும் உள்ள கட்சி நிர்வாகிகள் அந்தந்த மாவட்டங்களில் இஸ்லாமிய சகோதரர்களுடன் இணைந்து இப்தார் நோன்பு எடுத்து வருகின்றனர்

அதனை முன்னிட்டு இன்று விருதுநகர் கல் பள்ளி வாசலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கிழக்கு மாவட்ட செயலாளர் செல்வம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஏராளமனோர் கலந்து கொண்டு இஸ்லாமிய சகோதரர்களுடன் சகோதரர்களாக ஒன்றாக இணைந்து இப்தார் நோன்பு எடுத்தனர்.

பின்பு இப்தார் நோன்பில் பங்குபெற்ற அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கு அறுசுவை உணவான பிரியாணிகளை வழங்கினார்கள்

இந்த நிகழ்ச்சியின் போது தமிழக வெற்றி கழகத்தைச் சார்ந்த கழக நிர்வாகிகள் ஏராளமனோர் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி