விருதுநகர் மாவட்டம் தேசிய சுகாதார திட்டத்தில் மாவட்ட சுகாதார சங்கம் மூலம் முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில்
2 மருத்துவ அலுவலர்கள், 2 செவிலியர்கள், 2 சுகாதார ஆய்வாளர்கள், 2 மருத்துவமனை பணியாளர்கள் நிரப்பப்பட உள்ளது.
இப்பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான தகுதிகள் இனசுழற்சி ஒதுக்கீடு மற்றும் விண்ணப்பப்படிவம் ஆகியவை குறித்த விவரத்தினை இம்மாவட்டத்தின் http: //virudhunagar. nic. in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் வழியாகவோ 24. 03. 2025 பிற்பகல் 5. 45 மணி வரை சமர்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.