*சாதி சான்றிதழ் கோரி மலைவாழ் மக்கள் சங்கத்தினர் சங்கு ஊதியும், குடுகுடுப்பு வேடம் அணிந்தும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் - 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு. *
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சின்ன மூப்பன்பட்டி , திருச்சுழி, தானிப்பாறை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் காட்டு நாயக்கர் சமூகத்திற்கு இதுவரை தமிழக அரசு சாதி சான்றிதழ் வழங்கவில்லை என்றும் இதனால் தங்களின் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது என்றும் எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு தங்களுக்கு பழங்குடியின இந்து காட்டு நாயக்கர் சமூகத்தினர் சாதி சான்றிதழ் வழங்க கோரி,
200 பள்ளிக்குழந்தைகள் உட்பட 500க்கும் மேற்பட்டோர், குடுகுடுப்பு வேடம் அணிந்து, சங்கு ஊதியும் வேட்டை நாயுடனும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இந்த போராட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் பெனரி தலைமை தாங்கினார். ராமச்சந்திரன் , ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
போராட்டத்தை துவக்கி வைத்து விவசாய சங்க மாவட்ட செயலாளர் முருகன் பேசினார் விளக்கி மாவட்ட தலைவர் விஜய முருகன் பேசினார் முடிவில் மழை வாழ் சங்க மாநில பொதுச் செயலாளர் சரவணன் கண்டன உரையாற்றினார்