மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

83பார்த்தது
விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் இன்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.



கடந்த பத்து ஆண்டுகளில் சிறந்த மதிப்பெண்களை பெற்ற மாணவர்கள் குறித்து ஆய்வு செய்தால் அதில் ஒரு சில மாணவர்கள் மிக சிறப்பான வேலையில் இருக்கிறார்கள். மற்றவர்கள் சாதாரணமாக வேலையில் இருக்கிறார்கள். சிறப்பான வேலையில் இருக்கிறவர்கள் குறித்து ஆய்வு செய்து பார்த்தால் அந்த மாணவர்களுக்கு என்னென்ன வாய்ப்புகள் இருக்கிறது என்பது குறித்து விழிப்புணர்பு பெற்றவர்களாகவே இருந்திருப்பார்கள்.

மாணவர்களில் உயர்கல்விக்கு சேர்ந்தவர்களின் எண்ணிக்கையை பார்த்தால் அவர்களுடைய மதிப்பெண்கள் மட்டும் காரணம் இல்லை. அவர்களுக்கு கிடைத்த விழிப்புணர்வு தான் மிக முக்கிய காரணமாக இருந்தது. அதனால், ஆசிரியர்கள் அனைவரும் தங்களுடைய மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மாணவர்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய வாய்ப்புகள் கிடைக்க வேண்டுமென்றால் அதுக்கு கல்வி முக்கியம் ஆகும். கல்வி, கடும் உழைப்பை போல் எளிதான வாய்ப்பு எதுவும் கிடையாது. அப்படிப்பட்ட கல்வியை தெளிவாக நீங்கள் கற்றுக்கொண்டு வாழ்வில் வெற்றி பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன், இ. ஆ. ப. , அவர்கள் தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி