விருதுநகர்
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்
பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் குத்தகை அடிப்படையில் உணவகங்கள், தேநீர் கடைகள், கணினி உதவி மையங்கள் என 20க்கும்
மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது. 30 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இக்கடைகளை திடீரென எந்தவித காரணமும் கூறாமல் பொதுப்பணி துறையினர் அகற்றிக் கொள்ள கடந்த மாதம் மூன்று முறை கடிதம் அனுப்பியதாக கூறப்படுகிறது இந்நிலையில் அந்த கடையை புத்தகத்தை எடுத்த நபர்கள் கடையை காலி செய்ய மறுத்து கடையை காலி செய்யவில்லை இந்நிலையில் கடையை இடிப்பதற்கு காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் ஜேசிபி இயந்திரத்துடன் தயார் நிலையில் உள்ளனர் அவர்களை இடிக்க விடாமல் பேசிபி வாகனத்தை முற்றுகையிட்டு அரசு ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது