“பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களைத் தடுக்கவும் பாடுபட்டு, வீர தீர செயல் புரிந்த, 13 முதல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு, தகுதிகளின் அடிப்படையில், தேசிய பெண் குழந்தை தினத்தில் (ஜனவரி, 24) பாராட்டு பத்திரமும், ரூபாய் ஒரு இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி சிறப்பிக்கப்பட்டு வருகிறது.
மேற்படி விருதிற்கு கீழ்கண்ட தகுதிகளை உடைய குழந்தைகளிடமிருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கால அவகாசம் 25. 12. 2024 -வரை நீட்டிப்பு செய்துள்ளதால் தகுதியான பெண் குழந்தைகள் விண்ணப்ப விவரங்களை பதிவேற்றம் செய்யுமாறும், அசல் கருத்துருவினை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்திலுள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப. ஜெயசீலன், இ. ஆ. ப. , அவர்கள் தெரிவித்துள்ளார்.