வாழ்வாங்கி முதியோர் இல்லத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநில இளைஞரணி அமைப்பாளர் சப்பாணி முருகன் பிறந்தநாளை முன்னிட்டு பார்வர்டு பிளாக் கட்சியினர் முதியோர்களுக்கு குளிர் காலத்தை முன்னிட்டு போர்வை வழங்கியதோடு அன்னதானமும் வழங்கினர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே வாழ்வாங்கியில் வள்ளலார் முதியோர் இல்லம் அமைந்துள்ளது.
இங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட முதியவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாநில இளைஞரணி அமைப்பாளர் சப்பாணி முருகன் பிறந்த நாளை முன்னிட்டு அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் முதியோர் இல்லத்தில் வசித்து வரும் முதியவர்கள் அனைவருக்கும் குளிர் காலத்தை முன்னிட்டு போர்வைகள் வழங்கினார். அங்கு வசித்து வரும் அனைத்து முதியோர்களுக்கும் போர்வைகள் வழங்கிய பார்வர்டு பிளாக் கட்சியினர் நேற்றும் இன்றும் அங்குள்ள முதியவர்கள் அனைவருக்கும் அறுசுவை அன்னதானமும் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.