நீர்மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர்

73பார்த்தது
விருதுநகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் பொருட்டு நீர் மோர் பந்தலை விருதுநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே டி ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்.

தமிழகம் முழுவதும் அதிமுக தலைமை அறிவுறுத்தலின் பெயரில் கோடைகாலத்தில் பொது மக்களின் தாகம் தீர்க்கும் பொருட்டு நீர் மோர் பந்தலை அதிமுகவினர் திறந்து வைத்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக விருதுநகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆணைகுட்டம், சிவகாசி சாலை, மதுரை சாலை, லட்சுமி நகர் மற்றும் அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் பொருட்டு நீர் மோர் பந்தலை முன்னால் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார் பின்னர் பொதுமக்களுக்கு நீர் மோர் பழங்கள் உள்ளிட்டவைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி