அதிமுக மூத்த தொண்டரை நலம் விசாரித்து முன்னாள் அமைச்சர்

72பார்த்தது
விருதுநகரில் உடல் நலம் பாதிக்கப்பட்ட அதிமுக மூத்த தொண்டரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நிதி உதவி வழங்கினார்.

விருதுநகர் மேற்குப் பாண்டியன் காலனி பகுதியில் வசித்து வருபவர் பாண்டி(75). இவர் அதிமுகவின் முன்னாள் கிளைச் செயலாளர் ஆக பணியாற்றி வந்தவர். இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிப்படைந்துள்ளார்

இந்நிலையில் உடல் நலக் குறைவால் பாதிப்படைந்துள்ள பாண்டி என்பவரை முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவரது இல்லத்திற்க்கு சென்று உடல்நலம் விசாரித்து கழக பொது செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் சார்பாக நிதி உதவி வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நகரக் கழகத் துணைச் செயலாளர் பா. கண்ணன் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி